காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மொத்தம் 86% வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் தோல்வியை தழுவியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பொது குழு உறுப்பினர்கள் மொத்தம் 9,915 பேர் வாக்களித்தனர். இதில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவாகின. பின்பு ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு பதிவான வாக்குகள் என்னும் பனி காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் நடைபெற்றது. மொத்தம் பதிவான 9,385 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.