Sunday 19th of October 2025,
இந்தியாவில், காலநிலை, நகரமயமாக்கல் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்துவிட்ட 'சீட்டா' ரக சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக தென் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவிலிருந்து 8 சீட்டா ரக சிறுத்தைகளை பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 3 ஆண் மற்றும் 5 பெண் சிறுத்தைகள் இந்தியாவிற்கு நமீபியா அரசு வழங்கியது.
நேற்று நமீபியா நாட்டில் இருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 8 சீட்டா ரக சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகருக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவிற்கு நேற்று அர்ப்பணித்தார். தொடர்ந்து சிறுத்தைகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்