Sunday 19th of October 2025,
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்துள்ளது. இன்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார் அப்பொழுது, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை நடத்த தடை விதிக்காத போது,கட்சி விதிகளின் படி பொதுக்குழு மீறி நடத்தப்பட்டிருந்தால் மீண்டும் மறுபொதுக்குழுவை நடத்தி யார் தலைமை என்று முடிவு செய்ய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது என ஜெயச்சந்திரன் நீதிபதி உத்தரவிட உரிமை உள்ளதே தவிர ஆனால் அந்த இருநீதிமன்றங்களும் தடை விதிக்க மறுத்த பொதுக்குழுவை செல்லாது என்று அறிவித்தது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை ஒரு உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி மீறமுடியுமா என்பது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் ஜெயச்சந்திரன் மீறி தீர்ப்பு சொல்லியது நீதிமன்றங்கள் மீதே மக்களுக்கு நம்பிக்கையை குறைக்கும் தீர்ப்பாக அமைந்துவிட்டது. மேலும் நீதிபதி உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும் சூழல் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தில், அதிமுகவின் கட்சி அடிப்படை விதிகளின் படி பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது. மேலும் மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றை தலைமை கோரியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது, அதனால் தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்திவைத்தனர். மேலும், எழுத்துப் பூர்வமான வாதங்கள் இருந்தால் நாளைக்குள் தாக்கல் செய்யும்படி இரு தரப்பிற்கும் நீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர்.