Sunday 19th of October 2025,
சென்னை: தமிழக வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் பரத் சக்கரவர்த்தி, மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள நர்சரிகள் அந்நிய மரக்கன்றுகளை வளர்க்கவும், விற்கவும் தடை விதிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்நிய மரங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.