Sunday 19th of October 2025,
புதுடெல்லி: உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா வரும் ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற உள்ளார். இதனை தொடர்ந்து நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு 49 வது தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்து இதற்கான கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதி யு.யு.லலித் வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தேர்வு செய்யப்பட்டால் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக மொத்தம் 74 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பார்.