Sunday 19th of October 2025,
மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்பி டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, ' சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பசுமை விமான நிலையம் அமைக்க திட்டம் உள்ளதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார்.
சென்னைக்கு அருகில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக நான்கு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை கேட்டுக்கொண்டது. இதில் பரந்தூர் இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கும்படி ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்ப வேண்டும். அதனை தொடர்ந்து புதிய பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.