Thursday 15th of January 2026,
தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 6 ஈரநிலங்கள் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்,இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது. இந்த அங்கீகாரத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு வனத்துறைக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.