Thursday 15th of January 2026,
டெல்லி: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 28 சதவிகிதம் அதிகம் என்றும், ஜிஎஸ்டி வரலாற்றில் 2வது முறையாக உச்சபட்ச வரி வசூல் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச வருவாய் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட ஜூலை மாத வருவாய் 28% அதிகம். இதுவரை பதிவு செய்யப்படாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் 2022 இல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.8,449 கோடியாக உள்ளது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.