Sunday 19th of October 2025,
இந்தியாவில் 5ஜி அலைவரிசைகளை பெற நடைபெற்ற ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. இதில் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5-ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அணைத்து நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ₹ 88,078 கோடிக்கு விற்கப்பட்ட அனைத்து அலைக்கற்றைகளிலும் கிட்டத்தட்ட பாதியை வாங்கியுள்ளது. ஜியோவிற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் 5 ஜி அலைக்கற்றையை ₹ 43,084 கோடிக்கு வாங்கியுள்ளது. வோடபோன் - ஐடியா நிறுவனமானது சுமார் ₹ 18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது. அதானி நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை ₹ 212 கோடிக்கு வாங்கியுள்ளது என ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறினார்.