Sunday 19th of October 2025,
சென்னை: ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜோசப் கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடிய அசாத்திய திறமை உடையவர். மக்கள் மத்தியில் ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் இவருக்கு மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். இவர் கடைபிடித்த முக்கிய கொள்கைகள் மீண்டும் நம் பார்வைக்கு,
1. பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அது மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை. 2. நாட்டில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்லுங்கள்.
3. எவ்வளவு பெரிய தவறையும், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரிலே நியாயப்படுத்த வேண்டும்.
4. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பொய் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 5. எல்லா விதமான உண்மைகளுக்கும், ஒரு பொய்க்கதையைப் புணைந்து அதை சமூகத்தில் உலாவ விட வேண்டும்.
6. தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தேச துரோகிகள் எனச் சொல்ல வேண்டும். 7. தம் இயக்கத்தில் உள்ள தலைவர்களை பொதுமக்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
8. அடிக்கடி பேரணி நடத்துங்கள். அடிக்கடி பெரும் திரள் கூட்டத்தை நடத்துங்கள். 9. கடந்த காலப் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்.