Sunday 19th of October 2025,
சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு பிரதமர் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நேற்றைய விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம், சோழர்கள் என முப்பரிமான வீடியோ மூலம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ நிகழ்ச்சி நடைபெற்றது.