Sunday 19th of October 2025,
மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா? என கண்காணிக்கப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர். விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை ‘மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்’ அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தினமும் வரும் 300 முதல் 400 பயணகளுக்கு ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.