விரைவில் 5-ஜி சேவை - ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 5G சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் இதன் மூலம் தனியார் 5G நெட்வொர்க்குகளை இயக்குவதற்கு வழி வகுக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளை நேரடியாக ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

5ஜி சேவையானது 4 ஜியை விட சுமார் 10 மடங்கு வேகமானது எனவே 5ஜி சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 72 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் என்று புதன்கிழமை அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஏலத்தில் நாட்டின் முக்கியமான மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா (Vi) பங்குபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெக்ட்ரத்தை சரணடைவதற்கான விருப்பம் வழங்கப்படும்.

Follow Us