Thursday 15th of January 2026,
தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை சேர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பணியில் பல ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இந்த திட்டத்தை இந்த திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் இந்த அக்னிபாத் என்னும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Fans
Fans
Fans
Fans