Thursday 15th of January 2026,
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சூழ்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கட்சியின் முத்த நிர்வாகிகள் நேரடியாகவே ஒற்றைத் தலைமை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு ஒற்றைத்தலைமை தேவையில்லை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை. கட்சியில் இணைந்த பின்பு பிரதமர் அவர்கள் அழைப்பின்பேரில் டெல்லி சென்று அவரை சந்தித்த போது துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆனால் அவரிடம் வேண்டாம் என்று கூறினேன். இதில் அவர் அழுத்தம் கொடுத்ததால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என்று கடந்த பொதுக்குழுவிலேயே தீர்மானம் போடப்பட்டு விட்டது. அதை மீறுவது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிக பெரிய துரோகம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவி அதிமுக தொண்டர்களால் தேர்தல் முறை மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதிகளை கட்சி தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினார். கடந்த 6 ஆண்டுகளாக கட்சி இரட்டைத் தலைமையில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எனவே ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறினார்.
Fans
Fans
Fans
Fans