10 ,12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- ஜூன் 20 - ஆம் தேதி வெளியீடு

தமிழகத்தில் 10 ,12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20 - ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுவர்மா வெளியிட்ட அறிக்கையில், 2021 -22 -ம் கல்வியாண்டு, 10 ,12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20 - ஆம் தேதி திங்கள்கிழமை காலை பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார். இந்த வருடம் ஒரே நாளில் இரண்டு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்படுகிறது இதில் காலை 9.30 மணிக்கு 12 - ம் வகுப்பு தேர்வு முடிவுகள் , மதியம் 12 மணிக்கு 10 - ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். மேலும் மாணவர்கள் உடனடியாக தங்கள் முடிவுகளை கீழ் காணும் இணைய தளங்களின் மூலம் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

www.tnreults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.gov.in
www.dge.tn.gov.in

மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். மதிப்பெண் பட்டியல் தங்கள் பள்ளிகள் மூலம் சில நாட்களில் வழங்கப்படும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us