Sunday 19th of October 2025,
மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் தலைவர் தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் திரு. த.முருகேசன் மற்றும் உறுப்பினர்கள், மாண்புமிகு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்கள். புதிய கல்விக் கொள்கை, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம், தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நோக்கங்களை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கவும், அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும். மேலும் ஓராண்டிற்குள் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து அதன் இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில கல்விக் கொள்கை குழு உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வரை ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து மாநில கல்விக் கொள்கை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம்விரைவில் கருத்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.
Fans
Fans
Fans
Fans