Sunday 19th of October 2025,
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் இடையே ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் செவாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: இந்த கூட்டத்தில், கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை என கருத்து தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., ராணுவ கட்டு கோப்புடன் நடக்கும் இயக்கம் என்ற முறையில், ஒற்றைத் தலைமை அவசியம் என வலியுறுத்தினர். ஒற்றைத் தலைமை யார் என்பதை, கட்சி முடிவு செய்யும். ஒற்றைத் தலைமைக்கு செயல் வடிவம் கொடுப்பதை, கட்சி முடிவு செய்யும். சசிகலாவுக்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தம் கிடையாது. அவர் குறித்து பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று கூறினார்.
Fans
Fans
Fans
Fans