Sunday 19th of October 2025,
தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி உயிரி தொழில்நுட்ப அறிவியல் படிப்பில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள 10 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்ற மாட்டாது. 69 % இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மிகவும் உறுதியாக உள்ளார் என்பதற்கு உதாரணமாக தான் அவர் இந்த இட ஒதுக்கீட்டை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் மட்டுமல்ல வேலைவாய்ப்புகளிலும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதற்காக ஒரு குழுவை நியமித்து இருக்கின்ற ஒரு முதலமைச்சரை நம்முடைய தமிழகம் பெற்றுள்ளது.அந்த அடிப்படையில் நிச்சயமாக அணைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் இந்த இட ஒதுக்கீடு முழுமையாக இப்போது பின்பற்றப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
Fans
Fans
Fans
Fans