அசாம் மற்றும் மேகாலயாவில் வெள்ளம்- ஆரஞ்சு எச்சரிக்கை

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் இரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் கனமழைக்கு இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இந்த இரண்டு மாநிலங்களும் கடந்த ஆறு நாட்களாக கடுமையான நிலச்சரிவுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது, நிலச்சரிவு காரணமாக இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

Follow Us