ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி- இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் மூலம் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தும் கொண்டுவர இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜிவ் குமார் ஒன்றிய சட்ட அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால், ஏதேனும் ஒரு தொகுத்தெயில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன்முலம் அத்தொகுதி மீண்டும் ஒரு இடை தேர்தலை சந்திக்க நேரிடுகிறது. எனவே இடைத்தேர்தலுக்கு காரணமாகும் வேட்பாளருக்கு அதிகமான அபராதத்தை விதிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்று கொள்ள வேண்டும் அல்லது இரண்டு தொகுதியிலும் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Follow Us