Thursday 15th of January 2026,
கடந்த வாரத்தில் பதிவான புதிய கோவிட்-19 வழக்குகளில் 81% கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, மற்றும் டெல்லி ஆகிய நான்கு நான்கு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிக பாதிப்புக்குள்ளான இந்த மாநிலங்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.
“கடந்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில், வழக்குகளின் அதிகரிப்பு கவனிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று அதிகரிப்பு குறித்து பொது மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர், ஏனெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; இருப்பினும், கோவிட்-19 வாழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களில் புதிய கோவிட் -19 தொற்றுகளின் 'உயர்வு' குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு கடந்த வாரம் கடிதம் எழுதியுயுள்ளது, மேலும் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. "நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் போதுமான சோதனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்று பரவலின் அளவைப் பற்றிய துல்லியமான விவரங்களை சேகரித்து அதனை கட்டுப்படுத்த அனைத்துப் பகுதிகளிலும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் தகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உறுதி செய்ய வேண்டும். இதுவரை, மருத்துவமனை மற்றும் இறப்பு அதிகரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதற்கிடையில், பூஸ்டர் கவரேஜை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்,” மேலும் "மாநிலங்கள் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது மற்றும் தொற்றுநோய் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இதுவரை பின்பற்றின வழிமுறைகளை மீண்டும் தொடர்ந்து செயல் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்" என்று ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Fans
Fans
Fans
Fans