Sunday 19th of October 2025,
மேற்கு வங்க சட்டசபையில் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 13) ஆளுநருக்கு பதிலாக, மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. மம்தா பானர்ஜி அரசாங்கம் கொண்டுவந்த இந்த மசோதாவின் மூலம் மாநில ஆளுநர் பல்கலை கழக வேந்தராக செயல்படும் நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓரு மாநில முதல்வர் மாநில பல்கலைக்கழங்களின் வேந்தராக இந்த மசோதா வழிவகுக்கிறது. இதேபோன்ற மசோதா தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மாநில ஆளுநர்கள் வேந்தராக அனுபவிக்கும் அதிகாரத்தையும் குறைக்கிறது.
மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும் இந்த மசோதாவிற்கு ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்கலாம், அல்லது ஒப்புதலைத் தடுத்து நிறுத்தலாம் அல்லது மறுபரிசீலனைக்காக சட்டசபைக்கு அனுப்பலாம். ஆனால், சட்டத்திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்களுடனோ சட்டசபையில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, திருப்பி அனுப்பினால், ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
Fans
Fans
Fans
Fans